இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஏப்ரல் 26) ஒரே நாளில் 153 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டடோரின் மொத்த எண்ணிக்கை 9,398 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று 112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 5,50,856 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 304 இடங்கள் தனிமைபடுத்தப்பட்ட இடங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.