சென்னை: இஸ்கான் சென்னை (அக்கரை) அமைப்பின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொண்டாடப்படும் 'மதுர மகோத்சவ (கீர்த்தன் விழா)' வருகிற ஜனவரி 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் விழா, தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பக்தி யோகத்தின் பரிசுத்த அநுஷ்டானமான பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களைப் பாடுவதன் மூலம் ஆன்மீக அனுபவத்துக்கு வாய்ப்பு தருகிறது.
இந்த கீர்த்தன திருவிழாவில் மூத்த சந்நியாசிகளும் மற்றும் பல பக்தர்களும் இணைந்து கீர்த்தனம் புரிய உள்ளனர். கலியுக தர்மமாகிய ஹரி நாம ஸங்கீர்த்தனத்தின் மீதான பற்றுதலை எல்லாருக்கும் வழங்கும் பொருட்டு, குடும்பமாக கலந்து கொள்ளும் வகையில் இந்த விழா அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முருகனுக்கு அரோகரா போட்ட அமெரிக்க பக்தர்கள்! வைரலாகும் வீடியோ!
விழாவின் சிறப்பம்சங்கள்: நிரந்தர கீர்த்தன்: மூன்று நாட்களும் தொடர்ந்து பக்தி பாடல்களை பாடுவதின் ஆன்மீக சக்தியை அனுபவிக்கவும்.
சிறந்த கீர்த்தன் கலைஞர்கள்: உலகப் புகழ்பெற்ற கீர்த்தன் கலைஞர்களின் உணர்ச்சி மிக்க பாடல்கள்.
பிரசாதம்: பகவான் கிருஷ்ணருக்கு அன்புடன் சமர்ப்பிக்கப்பட்ட சுவையான உணவை அமுதமாக அனுபவிக்கவும்.
குடும்பத் தோழமை சூழல்: அனைத்து வயதினரும் இணைந்து அனுபவிக்கத் தகுந்த சூழல். இந்த ஆன்மீக திருவிழாவில் கலந்துகொண்டு பக்தியின் மகத்துவத்தை அனுபவிக்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள். மேலும் தகவல்களுக்கு மற்றும் பதிவு செய்ய: https://madhuramahotsava.com/.