ETV Bharat / state

'தேர்தலில் துரோகிகளுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும்' - ஓபிஎஸ் சூளுரை - mgr-jayalitha

தூத்துக்குடி: அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்று துரோகம் செய்தவர்களுக்கு, இந்த தேர்தலில் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
author img

By

Published : May 11, 2019, 9:24 AM IST

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அத்தொகுதிக்குட்பட்ட வசவப்பப்புரம், வல்லநாடு, தெய்வ செயல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. நிலங்கள் அபகரிக்கப்பட்டது. மின்சார தட்டுபாட்டை போக்க முடியாத நிலை இருந்தது. திமுக எந்த சாதனையும் செய்யவில்லை. மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை பற்றி குறை கூற முடியாமல் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று திமுகவினர் சொல்லி வருகிறார்கள். ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. அதிமுக மிகப்பெரிய ஆலமரம். இந்த இயக்கத்தை ஒரு கோடிக்கும் மேலான தொண்டர்கள் விழுதுகளாக தாங்கி நிற்கின்றனர்.

28 ஆண்டு காலம் நாட்டை ஆளும் பெறும் இயக்கம் அதிமுகதான். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது தேவை இல்லாமல் போயிருக்கும். ஆனால் எம்எல்ஏ அணி மாறியதால்தான், இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தனி அணியாக உள்ளனர். அவர்கள் அணி அல்ல. நமது பிணி. பிணியும் அல்ல சனி. ஆகவே சனி நம்மை விட்டு போய் விட்டது. பல ஆண்டுகளாக நம்மோடு இருந்த அவர்கள் இன்று நமக்கு துரோகம் செய்துவிட்டு தனி அணியாக போய்விட்டனர். இந்த தேர்தலில் துரோகிகளுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.

ஓபிஎஸ் பரப்புரை

ஓட்டபிடாராம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வசவப்பப்புரம், வல்லநாடு, தெய்வ செயல்புரம், முடிவைதானேந்தல் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடத்தில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,

மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு கொண்டு வரும் சிறந்த சட்டமன்ற உறுப்பினராக மோகன் இருப்பார்.
மக்கள் இந்த தேர்தலில் எஜமானர்களாக, நீதிபதிகளாக இருந்து வாக்களிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தமிழகத்தில் முழு உணவு பாதுகாப்பை கொண்டுவந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

2023 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை ஏற்படவேண்டும் என்பதற்காக 16 லட்சம் ஏழை எளிய மக்கள் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதில் 6 லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல் உற்பத்தியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகம் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக மத்திய அரசின் கிருஷிகர்மான் விருதை தமிழகம் பெற்றுள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அதன் மூலம் 3 இலட்சம் கோடி முதலீட்டில் தொழில் முதலீடின் மூலம் 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்கும் சம நிலையில் வாழ வழிவகை செய்வதற்காக பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. நிலங்கள் அபகரிக்கப்பட்டது.  மின்சார தட்டுபாட்டை போக்கமுடியாத நிலை இருந்தது. திமுக எந்த சாதனையும் செய்யவில்லை. மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை பற்றி குறை கூற முடியாமல் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுகவினர்  சொல்லிவருகிறார்கள். ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக ஆகமுடியாது. அதிமுக மிகப்பெரும் ஆலமரம். இந்த இயக்கத்தை ஒரு கோடிக்கும் மேலுள்ள தொண்டர்கள் எனும் விழுதுகள் தாங்கி நிற்கிறது . 28 ஆண்டு காலம் நாட்டை ஆளும் பெறும் இயக்கம் அதிமுகதான்.

ஓட்டபிடாராம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது தேவை இல்லாமல் போயிருக்கும். ஆனால் எம்.எல்.ஏ. அணி மாறியதால் தான் இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தனி அணியாக உள்ளனர். அவர்கள் அணி அல்ல. நமது பிணி. பிணியும் அல்ல சனி. ஆகவே சனி நம்மை விட்டு போய் விட்டது. பல ஆண்டுகளாக நம்மோடு இருந்து கொழுத்து இன்று நமக்கு துரோகம் செய்துவிட்டு தனி அணியாக போய்விட்டனர். இந்த தேர்தலிலே துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Visual reporter app.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.