தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அடைக்கலாபுரம், வீரபாண்டியன்பட்டணத்திலுள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்கள், முதியோர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தலைமையில் நேற்று (ஜூன் 23) நடைபெற்றது.
இம்முகாமைத் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்பி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில், தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் வளரும் குழந்தைகளைப் பார்வையிட்டார்.
பின்னர் பேசிய கனிமொழி எம்பி, "ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான கரோனா தடுப்பூசிகள் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.
அதிகப்படியான தடுப்பூசிகள் கிடைக்கும்பட்சத்தில் கரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி அதிகம் பேருக்குப் போட வழிவகை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் - தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம்