தூத்துக்குடி: இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுசை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தினை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
இதனையடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், புதிதாக வாழை என்ற திரைப்படத்தினை இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் நடந்தது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு படப்பிடிப்பினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர். படம் கிராம மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் கதை என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க: ஜொலிக்கும் உடையில் தமன்னா..!