தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குருமலை காப்புகாடு பகுதியில் வன அலுவலர் சிவராம் உத்தரவின் பெயரில் வனவர்கள் ஆனந்த், நாகராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ராஜபுதுக்குடி பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜா புதுக்குடி கண்மாய் பகுதியில் கவுதாரி பறவையை வேட்டையாடிய கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, மகேஷ் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த கவுதாரி பறவை, வேட்டையாட பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.