கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தூத்துக்குடி சென்ற பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று (ஜூன் 10) திண்டுக்கல் ரயில்வே இருப்புப்பாதை காவல் துறை ஆய்வாளர் அருள்ஜெயபால் தலைமையிலான காவல் துறையினர் ரயில் பெட்டிகளில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்த துணிபைகளில் கர்நாடக மதுப்பாடாடில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டிகளை கடத்திச் சென்ற மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்த 83 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.