தூத்துக்குடி: 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேசிய கடற்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் சுனாமி ஏற்பட்டது. இந்த ஆழிப்பேரலையால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதோடு சுமார் 8 ஆயிரம் பேர் பலியாகினர்.
சுனாமி தாக்கிய 18-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மீனவர்கள் கைகளில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டில் இரண்டு விலை பட்டியல்!