விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்த சுகுமாரன் ,முத்துலட்சுமி மற்றும் அவர்களின் உறவினர்கள் என 18 பேர் ஒரே வேனில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கருங்குளம் அருகே உள்ள பாலத்தில் செல்லும்போது வேன் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். காயமடைந்த 9 பேர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்து குறித்து செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்