ETV Bharat / state

'கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' - கூட்டுறவுத்துறை பணியிடங்கள்

துாத்துக்குடி: கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

cellur raju
author img

By

Published : Jul 14, 2019, 11:21 AM IST

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனியில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா - வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை, அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.

இதில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு திறந்துவைத்தனர். தொடர்ந்து வானரமுட்டியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள், 794 பயனாளிகளுக்கு ஐந்து கோடியே 93 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன்களுக்கு ரூ.1257 கோடி வட்டியை மானியமாக தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். விவசாயிகள் ஓராண்டுக்குள் கடனை செலுத்திவிட்டால் வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்று சொன்ன அவர், நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.

அப்படி எந்தக் கடையிலும் பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த செல்லூர் ராஜு, கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜு

Intro:கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுBody:கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு

கோவில்பட்டி லாயல் மில் காலனியில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா மற்றும் வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை ,அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். தொடர்ந்து வானரமுட்டியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் 794 பயனாளிகளுக்கு 593.33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் எம்எல்ஏக்கள் எஸ்பி சண்முகநாதன், சின்னப்பன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ், கூடுதல் பதிவாளர், மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, இணைப்பதிவாளர் இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன்களுக்கு 1257 கோடி ரூபாய் வட்டி மானியமாக தமிழக அரசு கொடுத்துள்ளது, விவசாயிகள் ஓராண்டுக்குள் கடனை செலுத்தி விட்டால் வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்றும்.தற்பொழுது 42 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் திமுக ஆட்சி காலத்தில் 9 ஆயிரத்து 163 கோடி ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்பட்டது என்றும்,நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி எந்த கடையிலும் பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் இறந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்தார்Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.