தூத்துக்குடி: 37 ஆவது தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியானது, அசாம் மாநிலம், கௌகாத்தியில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்ற வீராங்கனைகள் போட்டியில் பங்கு பெற்றனர்.
இப்போட்டியில், தூத்துக்குடியை சேர்ந்த அரசு உதவி பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவி சஹானா தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்றார். இவர் 1.68 சென்டிமீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தடைந்த இவரை நண்பர்கள் படைசூழ உற்சாக வரவேற்பு அழித்தனர். பின்னர், யானையிடம் ஆசிர்வாதம் வழங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 37 ஆவது தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றுளேன். இதற்கு, உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் (சிந்தடிக் கோட்) அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். மேலும், தேசிய அளவில் தங்க பதக்கம் வெல்ல வேண்டும். இதுவே எனது ஆசை என கூறினார்.
இவர் இதற்கு முன்பு, குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும், ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான தேசிய போட்டியிலும் தமிழ்நாட்டின் சார்பாக பங்கு பெற்று வெண்கல பதக்கத்தினை பெற்றுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 25 வருடத்திற்கு பின்பு முதல் முறையாக உயரம் தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சங்கரதாஸ் சுவாமி நினைவு தினம்... ஆட்டம் போட்ட விஜய் ஆண்டனி