ETV Bharat / state

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முதலாமாண்டு நினைவஞ்சலி

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அங்குள்ள தேவாலயங்கள், கிராமங்களில் கலவரத்தில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

STERLITE_FIRING
author img

By

Published : May 22, 2019, 10:32 AM IST

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராமத்தில் மக்கள் 100 நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் இருந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நூறாம் நாள் போராட்ட தினமான மே 22ஆம் தேதி அன்று பனிமய மாதா ஆலயத்தில் இருந்து பேரணியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்தனர்.

காவல் துறை சார்பில் இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தடையை மீறி இந்தப் பேரணியானது நடைபெறும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து பேரணிவரும் என அறிவிக்கப்பட்ட சாலைகளில் காவல் துறையினர் தடுப்புகளை அடுக்கி வைத்து பேரணி ஆட்சியர் அலுவலகம் சென்று அடையாதவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

sterlite
thoothukudi
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியாக வந்தபொழுது பேரணியை தடுத்து நிறுத்த முயன்ற காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் கலவரமாக வெடித்தது.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 11-ம் வகுப்பு மாணவி ஸ்னோலின் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறும் நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியையுமான பாத்திமா பாபு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து அஞ்சலி கூட்ட நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தார்.

அதன் அடிப்படையில் தனியார் ஓட்டலில் வைத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் நினைவாக இன்று அஞ்சலி கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளான பாத்திமா பாபு, ஹென்றி டிபேன், வணிகர் சங்க நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர போராட்டம் நடைபெற்ற கிராமங்களான குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மீளவிட்டான், பண்டாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் உருவப் படங்களை வைத்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெறும் நினைவஞ்சலி கூட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

துாத்துக்குடி துப்பாக்கி சூடு: முதலாமாண்டு நினைவஞ்சலி

Intro:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு:
தூத்துக்குடியில் தேவாலயங்கள், கிராமங்களில், கலவரத்தில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவஞ்சலி - பலத்த போலீஸ் பாதுகாப்பு

Body:தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு கழிவுகளால் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, குழந்தையின்மை உள்பட பல கொடிய நோய்கள் ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் மாசடைந்து உள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் குமாரெட்டியாபுரம் கிராமத்தில் மக்கள் 100 நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டம் சுற்றுவட்டார கிராம பகுதிகளான தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், பண்டாரம் பட்டி, சில்வர்புரம், வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, தட்டப்பாறை உள்ளிட்ட இடங்களிலும் பரவியது. அந்தந்த பகுதி கிராம மக்கள் தங்களது பகுதிகளில் அறவழியில் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்களின் நூறாம் நாள் போராட்ட தினமான மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அனைவரும் ஒன்று கூடி பனிமய மாதா ஆலயத்தில் இருந்து பேரணியாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வரை சென்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்தனர்.

காவல்துறை சார்பில் இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தடையை மீறி இந்த பேரணியானது நடைபெறும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் சார்பில் அறிவிக்கப் பட்டது. இதனால் தூத்துகுடியில் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து பேரணி வரும் என அறிவிக்கப்பட்ட சாலைகளில் போலீசார் தடுப்புகளை அடுக்கி வைத்து பேரணி கலெக்டர் அலுவலகம் சென்று அடையாதவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியாக வந்தபொழுது பேரணியை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் கலவரமாக வெடித்தது. இதை தொடர்ந்து போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 11-ம் வகுப்பு மாணவி ஸ்னோலின் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியையுமான பாத்திமா பாபு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து அஞ்சலி கூட்ட நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தார். அதன் அடிப்படையில் தனியார் ஓட்டலில் வைத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் நினைவாக இன்று அஞ்சலி கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பேராசிரியை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளான பாத்திமா பாபு, ஹென்றி டிபேன், வணிகர் சங்க நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர போராட்டம் நடைபெற்ற கிராமங்களான குமாரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மீளவிட்டான், பண்டாரம் பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் உருவப் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெறும் நினைவஞ்சலி கூட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கென திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்புகளை பலப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.