தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை சாமிநாதன் ஓட்டிவந்த நிலையில், புதுக்குடி அருகே வந்தபோது எதிரே வந்த வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். உடன் வந்த மற்றொருவரும் இந்த விபத்தில் பலியானார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருநெல்வேலி, திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.