ETV Bharat / state

'சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு

author img

By

Published : Jul 4, 2020, 7:51 PM IST

திருநெல்வேலி: சாத்தான்குளம் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

there is no relationship between sathankulam inspector and me said minister kadambur raju

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் வீட்டில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, பாலகிருஷ்ணன், பாண்டி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்காத நிலையில், இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி திருநெல்வேலி அரசுத் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு நிவாரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஷவாயு தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் அறிவிப்பின்படி இன்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. கழிவுநீரைச் சுத்தம் செய்வதற்காக நகராட்சியில் இயந்திரம் உள்ளது. பொதுமக்கள் முறைப்படி நகராட்சியிடம் அனுமதிபெற்று கழிவுநீரைச் சுத்தம் செய்ய வேண்டும்" என்றார்.

சாத்தான்குளம் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட காவல் துறையினர் கைதுசெய்யப்பட்டது போல் தென்காசி மாவட்டம் வி.கே. புதூர் காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் அடைந்த ஆட்டோ டிரைவருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்காதது ஏன், என்ற கேள்வி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாடு அரசு எந்த சாதி, மத பாகுபாடின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவருகிறது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் முற்றிலும் தவறானது. அவர் பிறந்த ஊர், சமூகம் குறித்து பொய்யான வதந்திகளை சில விஷமிகள் பரப்புகின்றனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் தவறு என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே இந்தத் தகவலைப் பரப்பியவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சம்பவத்தில் கூட அரசியல் செய்பவர்களைப் பொதுமக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. இதனை முன்னதாகவே, சிபிசிஐடி ஐஜி உறுதிப்படுத்தியுள்ளார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.