ETV Bharat / state

ஊரடங்கால் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையை பார்த்த மகன்! - ஊரடங்கினால் 23ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்த்த மகன்

தூத்துக்குடி: சாலையில் ஆதரவற்று இருந்தவர்களை மீட்டு நல்வாழ்வு அளிக்க ஒரு தொண்டு நிறுவனம் எடுத்த முயற்சியால் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையை மகன் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  thoothukudi news  soya foundation  ஊரடங்கினால் 23ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்த்த மகன்  etv bharat spl
ஊரடங்கினால் 23ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்த்த மகன்
author img

By

Published : Apr 28, 2020, 3:45 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின்போது, சாலையோரம் திரிந்தவர்கள், வீடு இல்லாதவர்களை அரசின் உதவியுடன் சில தொண்டு நிறுவனங்கள் மீட்டு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவம் அங்காங்கே நிகழ்ந்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர் 65 பேரை ஆர்.சோயா தொண்டு நிறுவனம், மனிதம் விதைப்போம், ஹெல்பிங் ஹேண்ட்ஸ் அமைப்பினர் மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  thoothukudi news  soya foundation  ஊரடங்கினால் 23ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்த்த மகன்  etv bharat spl
23ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்த்த மகன்

இதுதவிர அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் முடிதிருத்தம் செய்தல், முகச் சவரம் செய்து அழகு பார்த்துவருகின்றனர். இவ்வாறு, கைவிடப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த முதியவர் ஒருவருக்கு முடித்திருத்தம் செய்து புத்தாடை அணிவித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. சமூக வலைதளம் மூலமாக அடையாளம் கண்ட அவருடைய மகன் ராமச்சந்திரன், 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையை நேரில்வந்து சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அஸ்வதி கூறுகையில், "ஆதரவற்றவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி வருகிறோம். சரியாக உடை அணியக் கூட தெரியாத நிலையில் அழுக்கு உடையுடனும், சிக்குப் பிடித்த தலைமுடியுடனும் சுற்றித்திரிந்த வேல்முருகன்(65), மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். எனவே, அவருக்கு முறையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி பூரண குணமடைந்த பின் அவருடைய குடும்பத்தினருடன் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.

தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வதி பேட்டி

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று அடுத்தக் கட்டமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்க எங்களது குழு தீர்மானித்துள்ளது. இதில் சில நபர்களை அவருடைய குடும்பத்தினரே முன்வந்து அழைத்துச் செல்வதாக கூறி உள்ளனர். ஒரு சிலருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான திட்டங்களை உருவாக்கி கொடுக்க ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

23 வருடங்களுக்குப் பிறகு தந்தையுடன் இணைந்த நெகிழ்ச்சி தருணம் குறித்து ராமச்சந்திரன் கூறுகையில், "தாயாரின் மறைவுக்கு பிறகு காணாமல் போன எனது தந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தேன். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் எனது தந்தையின் புகைப்படம் பரவியதை நண்பரின் மூலம் தெரிந்துகொண்ட நான் இங்கு எனது தந்தை பராமரிக்கப்பட்டு வருவதை நேரடியாக கண்டேன்.

எனது தந்தை மீண்டும் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எனது குழந்தைகள் அவரை பாசத்தோடு 'தாத்தா' என்று அழைக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. தற்போது எனது தந்தை இருக்கும் நிலையில் அவரை வைத்து பராமரிப்பது என்னுடைய பொருளாதார சூழ்நிலையில் முடியாத காரியம் என்பதால் அவருக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளை வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் முன்வந்துள்ளனர். முறையான சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பின் எனது தந்தையை நான் அழைத்துச் செல்வேன்" என்றார்.

இதையும் படிங்க: தலை இல்லாமல் நடுரோட்டில் கிடந்த ரவுடி... கையில் தலையுடன் ஆஜரான மூன்று பேர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.