தூத்துக்குடி அருகே விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர், விஜயகுமார், வயது(24). இவர் அப்பகுதியில் டாக்ஸி டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் குற்றாலம் சென்றிருந்தார். அப்போது, கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த ஹரிணி என்ற குழந்தை தனது குடும்பத்தினருடன் அருவியில் குளித்தபோது தண்ணீரில் தவறி விழுந்து பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.
சம்பவத்தைப் பார்த்த விஜயகுமார் உடனடியாக செங்குத்தான பள்ளத்தாக்கில் குதித்து, பலத்த நீரோட்டத்தில் தத்தளித்த குழந்தையை தூக்கி சில நிமிடங்களில் பாதுகாப்பாக அழைத்து வந்தார். விஜயகுமாரின் துணிச்சலான முயற்சியை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பாராட்டினர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் விஜயகுமாரை, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்-க்கு கார் ஓட்டுநராக பிப்ரவரி 23-ல் விஜயகுமார் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆட்சியரின் காரை பவ்வியமாக துடைத்து கொண்டிருந்தார், விஜயகுமார்.
மேலும், இவரை யார் என்று தெரியாத சிலர் ஆட்சியரின் கார் டிரைவர் புதியதாகவும், இளவயது பையனாகவும் உள்ளாரே என்று கடந்து சென்றனர். இக்கட்டான சூழலில் ஆபத்பாந்தவனாக மாறி உதவி பணிபெற்ற விஜயகுமாருக்கு வாழ்த்துகள்.
இதையும் படிங்க:'ஈரோடு தேர்தலில் வெற்றி உறுதி... ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான்' - ஈபிஎஸ் தடாலடி