தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சியை மறுபடியும், மறுபடியும் சரி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது, இதனால் எந்த பலனும் இல்லை என்றும், இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.