தூத்துக்குடி: தியாகி இமானுவேல் சேகரன் 65ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், விடுதலைச் சிறுத்தை கட்சி அலுவலகத்தில் வைத்து அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.
இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், தூத்துக்குடி, கோவில்பட்டி சட்டப்பேரவை அலுவலகத்தில் வைத்து அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:திருக்குறள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கைது!