இது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”இந்த ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்து குடும்பத்துடன் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில் அரசு அடுத்தடுத்த சில ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வேலைக்கு செல்வதற்காக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நிலையிலும், வேலைக்குச் செல்வதிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஆட்டோவில் ஒரு நபர் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. இதனால் பெரும்பாலும் எங்களுக்கு சவாரி கிடைப்பதில்லை. எனவே குடும்பத்தின் அன்றாட செலவுக்கே சிரமப்பட்டு வரும் நிலையில் சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன் தொகைக்கான மாத தவணையை கட்ட வற்புறுத்தி வருகின்றனர்.
இது எங்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். இவ்வாறு செய்வதன் மூலமாக நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைதான் ஏற்படும். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மகளிர் சுய உதவிக் குழு கடன் தவணைகளை செப்டம்பர் மாதம் முதல் கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கக் கோரி விவசாயிகள் மனு!