தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவர் பால்பாண்டி (வயது 30). இவர் பிட்காயினில் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிட் காயின் முதலீட்டில் திடீரென சரிவைக் கண்டு 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த 26 ஆம் தேதி சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தபோது திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த காவலரை சக காவலர்கள் உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக காவலருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நிலையில் நேற்று (நவ.2) சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் மற்றும் மதுரை போலீசார் காவலர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது பிட்காயின் முதலீடு தோல்விதான் காரணமா? என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:காடு, மலை கடந்து பயணம்.. வாழ்வாதாரத்திற்காக அல்ல.. ஜனநாயக கடமையை நிறைவேற்ற!