தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். அதில் குறிப்பாக நகரின் முக்கியச் சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. விபத்துகள் நேர வாய்ப்புள்ள இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காவல் துறையினர் உடனுக்குடன் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்தை சீரமைக்க உதவிடும் வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் சாலை தடுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று (ஆக.14) நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் மாவட்ட போக்குவரத்து துறைக்கு 50 சாலை தடுப்புகள் வழங்கப்பட்டன. அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
இதையும் படிங்க: சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் காவல்துறை