தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் தலங்களில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் குவிந்துவருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தர்ப்பணம் செய்தனர். அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்களின் சந்ததிகள் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம்.
இதன் காரணமாக தை அமாவாசை ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு கடற்கரை மற்றும் ஆறுகளில் பொதுமக்கள் தர்ப்பணம் வழங்குவது வழக்கம் அந்த வகையில் தை அமாவாசை தினமான தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள் கடலில் நீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர் பின்னர் ஆலயம் சென்று வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிசேகம் - பக்தர்கள் பங்கேற்பு