ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி!! - thooththukudi sterlite news

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் பழுது சரி செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி!!

author img

By

Published : May 19, 2021, 11:44 AM IST

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 13ம் தேதி அன்று 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவின் குளிர்விக்கும் கேலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் முயற்சியில் ஆலையின் தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஆலைக்கு வந்து பழுதை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கேலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி!!

தற்போது, உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் குளிர்விக்கப்பட்டு மருத்துவப் பயன்பாட்டுக்காக வெளிக் கொண்டுவர 36 மணிநேரமாகும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அதிகாரப்பூர்வமாக இன்று மாலை முதல் மருத்துவ ஆக்சிஜன் பயன்பாட்டுக்காக டேங்கர் லாரிகளில் அனுப்பிவைக்கும் பணி தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.