ETV Bharat / state

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய தங்கத் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.! - மாதா

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா தங்கத் தேரோட்ட நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 5, 2023, 10:30 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில், 441-வது ஆண்டு திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருள் ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. ஒவ்வொரு நாளும் பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

பனிமயமாதா பேராலயத்தில், முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இதுவரை 15 முறை தங்கத் தேரோட்டம் நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு 16-வது தங்கத் தேரோட்ட விழா நடைபெற்றது.

குறிப்பாக இந்த தங்கத் தேரானது 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் 53 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் நாட்டிலிருந்து தங்க தேர் அலங்காரத்திற்காகத் தங்க இழைகள் வரவழைக்கப்பட்டும், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டைமண்ட் கற்கள் இத்தேரில் பதிக்கப்பட்டும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேரோட்ட நிகழ்வு இன்று அதிகாலை 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், 7 மணிக்குக் கோவா உயர் மறைமாவட்ட பிஷப் கார்டினல் பிலிப்நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இமானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் அர்ச்சிப்பு செய்ய அன்னையின் தங்கத்தேர்ப் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 23 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 57 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2000 காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 50 சிசிடிவி கேமராக்கள் தங்கத் தேர் சுற்றி வரும் பாதைகளில் அமைக்கப்பட்டு அதன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு 100க்கும் மேற்பட்ட சீருடை அணியாத காவல்துறையினர், கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாகக் கோவிலைச் சுற்றி 4 இடங்களில் கண்காணிக்க உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அப்பகுதியில் நடைபெறும் காட்சிகளை பைனாகுலர் மூலம் பார்த்துக் குற்றச் சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருவிழாவைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் குடிநீர், கழிவறை, மருத்துவம், தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பனிமய மாதா கோவில் அருகில் பல்வேறு இடங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விழாவில் பங்கேற்க பக்தர்களின் வசதிக்காக இன்று (ஆகஸ்ட் 5ம் தேதி) சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும், ஆகஸ்ட் 6ம் தேதி விழா முடிந்து தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.