ETV Bharat / state

அண்ணாமலைக்கு விரைவில் நோட்டீஸ்.. திமுக எம்.பி.கனிமொழி அதிரடி! - திமுக சொத்துப்பட்டியல் குறித்து கனிமொழி

திமுகவினரின் சொத்துப் பட்டியல் வெளியிட்டது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi
திமுக
author img

By

Published : Apr 20, 2023, 12:58 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் நாளை (ஏப்.21) முதல் மே 1ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. அதேபோல் வரும் 28ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை இதே திடலில் நெய்தல் கலை விழா நடைபெறவுள்ளது. இந்த நெய்தல் கலை விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

இந்த நிலையில், புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழாவுக்கான முன்னேற்பாடுகளை எம்.பி.கனிமொழி நேற்று(ஏப்.19) நேரில் ஆய்வு செய்தார். அப்போது, புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழாவை விளம்பரப்படுத்தும் வகையில், ராட்சத பலூனை பறக்க விட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி கனிமொழி, "தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4வது புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழா 21.04.2023 முதல் 01.05.2023 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவுடன் சேர்ந்து ஏப்ரல் 28, 29, 30, மற்றும் மே 1ஆம் தேதிகளில் நெய்தல் கலைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

கலைத் திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய தொல்லியல் இடங்கள் அமைந்துள்ளன. எனவே, நமது மாவட்டத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து மிகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது? என்பது குறித்து கண்காட்சி அமைக்கப்பட உள்ளது" என்று கூறினார்.

திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியில் வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இதில் தமிழக அமைச்சர்கள் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி வருவதாகவும், விரைவில் தானும் தனது வழக்கறிஞர் மூலம் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்புவேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையாளர் தினேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஒரு அரசியல் நகைச்சுவை மன்னர்: விளாசிய விசிக தலைவர் திருமாவளவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.