தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, வடக்கு திட்டங்குளம், இளம்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குடிமராமத்துப் பணியின் காரணமாக இன்றைக்கு நீர்நிலைகள் நிரம்பி, பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்" எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், " ஒரு அரசியல் கட்சியைப் பொது பிரச்னைக்கு போராட அழைப்பது அநாகரிகமானது. ஆனால், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை எடுத்துக் கொண்டால் தற்போது அவை முடக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆகவே அதன் பொறுப்பாளர்கள் செயல்பட முடியாத நிலைமையில் உள்ளனர்.
எப்படி நடிகர் சித்தார்த் இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் தவறு என்று மாணவர்களோடு வந்து போராடினாரோ, அதைப் போன்று மக்கள் மீதும் சட்டத்தின் மீதும் அவநம்பிக்கை உள்ள நடிகர்கள் நேரடியாக களத்தில் இறங்கி கருத்துகளை பரிமாறுவது தான் சரியான வழியாக இருக்கும்" என்றார்.
இதையும் படியுங்க: