தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 நபர்கள் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவும் கடுமையான முறையில் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி தொகுதிக்குள்பட்ட போல்பேட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கீதா ஜீவன் ஏற்பாட்டின்பேரில் வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தீயணைப்பு வாகனம் மூலம் போல்பேட்டை, டூவிபுரம், டிஎம்பி காலனி, செல்வநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்தப் பணிகள் குறித்து கீதா ஜீவன் கூறுகையில், "தொடர்ந்து, மாநகர் பகுதி முழுவதும் இரண்டு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்" என்றார்.
இதையும் படிங்க: ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் இயந்திரங்கள் எரிந்து நாசம்