ETV Bharat / state

’கச்சத்தீவு முதல் நீட் தேர்வு வரை திமுக இரட்டை வேடம்’

மதுரை: கச்சத்தீவு முதல் நீட் தேர்வு வரை திமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு
author img

By

Published : Oct 17, 2020, 9:30 PM IST

அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றிய கழகத்தின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு கொடியேற்றி வைத்ததுடன் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

இந்தத் தொடக்க விழாவில் கயத்தாறு அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாற்றுக் கட்சியினர் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த ஆட்சி 4 ஆண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. தற்போது தேர்தலை சந்திக்கின்ற நிலையில் இருக்கிறோம்.

ஜெயலலிதா சொன்ன சொல்லைப்போல 50ஆவது ஆண்டு விழா பொன் விழா கொண்டாடும் நேரத்தில் மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் அதிமுக ஆட்சிதான் நடைபெறும்” என்றார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதில் திமுகவின் நிலைப்பாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ”திமுக எப்போதும் இரட்டை வேடம்தான் போடுகிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை 2016இல் காங்கிரஸ் ஆட்சியில், திமுக அங்கம் வகித்தபோது தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று நீட் தேர்வைப் பற்றி இரட்டை வேடம் போடுகின்றனர்.

காவிரி பிரச்னையில் தாரைவார்த்து கொடுத்தது திமுகதான். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் என்எல்சி பங்குகளைத் தனியாருக்குத் தாரை திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் இந்தியாவில் தனியாகப் பங்குகளை மாநில அரசு வாங்கியது தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்தான். சர்க்காரியா கமிஷன் வந்தபோது தன் மீது வழக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கச்சத்தீவு தாரைவார்த்தது திமுக.

அமைச்சர் கடம்பூர் ராஜு பேசிய காணொலி

தற்போது நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக மணவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

நீட் தேர்வு வேண்டாம் என்ற ஒரு கொள்கை ஒருபுறம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் கட்டாயம் என்ற நிலையில் மாணவர்களுக்கான பயிற்சிகளைக் கொடுத்துவருகின்றது தமிழ்நாடு அரசு” எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க:ஓபிசி இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு பெற்றே தீரும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.