ETV Bharat / state

மிஸ்டு கால் அண்ணனால் பெண்ணுக்கு துயரம்

author img

By

Published : Aug 11, 2021, 6:21 AM IST

திருமணமான பெண்ணை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பரப்பிய கிருஷ்ணகிரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டியூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் தனது செல்போனிலிருந்து நண்பருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக அது தூத்துக்குடி எட்டையபுரம் பகுதியில் உள்ள திருமணமான இளம் பெண்ணுக்கு சென்றுள்ளது,

இதனையடுத்து மஞ்சுநாதன், தன்னை சகோதரனாக நினைத்து பேசுமாறு கூறி, அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

முகம் பார்க்க ஆண்ட்ராய்டு போன்

நாளடைவில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக , கடந்த மார்ச் மாதம் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கிக் கொண்டு அந்த பெண்ணை நேரில் சந்தித்து வீட்டிற்கே சென்று கொடுத்துள்ளார் மஞ்சுநாதன்.

செல்ஃபோனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

அண்ணனின் ட்விஸ்ட்

இந்நிலையில் சகோதரனாகப் பேசி வந்த மஞ்சுநாதன், திடீரென அந்தப் பெண்ணிடம் காதலிப்பதாக கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் இனிமேல் பேசமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாதன், தான் வாங்கிக் கொடுத்த செல்போனை அந்தப் பெண்ணிடம் திரும்பத் தருமாறு கூறியுள்ளார். உடனடியாக அந்தப் பெண்ணும், தான் பயன்படுத்தி வந்த சிம்கார்டு, அதிலிருந்த பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல்களைக்கூட அழிக்காமல் செல்ஃபோனை அப்படியே மஞ்சுநாதனிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

புகைப்படம் சித்தரிப்பு

இதனை திரும்ப பெற்றுச் சென்ற மஞ்சுநாதன், சில நாட்களில் பேஸ்புக்கில் இருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி, அந்தப் பெண்ணே ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்ற புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். அதேபோல வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்

அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மஞ்சுநாதனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: திரைப்பட பாணியில் போலி ரெய்டு: 1 பெண் உள்பட 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.