தூத்துக்குடி தச்சர் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த உணவகம் அமைவதற்கான சிறப்பு திட்டத்தை ஈழ எதிலியர் மறுவாழ்வுக்கழகம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளின் அமைப்பின் உதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அட்வான்டேஜ் லிமிட்டெட் நிறுவனங்களின் தொழில் புட்ஸ் பிரைவேட் வழிமுறை காட்டுதல் மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சிறப்பான வணிக திட்டத்தை பயிற்றுவித்தோடு உருவாக்குவதற்கு உதவி புரிந்துள்ளது.
இந்த உணவக ஒருங்கிணைப்பாளர் குளத்துவாய்ப்பட்டி முகாமை சார்ந்த வசந்தி கூறும்போது, "எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அரசின் மூலமாகவும் மற்ற நிறுவனங்களின் உதவியோடு கிடைக்கும் என்ற கனவு இன்று நிறைவு பெற்றுள்ளது . எங்களைப்போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையோடும் ஆர்வத்தோடும் இவ்வாறான வாய்ப்புகளை மகளிர் பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். இவ்வுணவகத்தில் எங்களது சிறப்பான செயல்பாடுகள் மற்ற மகளிர் குழுக்களுக்கும் சிறப்பான வழிகாட்டுதலாக அமையும்.
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள பிரபலமான உணவுகளான கடல் உணவுகள், அப்பம், தட்டை, இடியாப்பம், புட்டு, சொதி, போன்ற உணவுகள் உள்ளனர். மேலும், எங்களது குடும்ப உறுப்பினர்களின் துணையோடு எங்களது வெற்றி குழந்தைகளின் சுய சார்பினையும் வாழ்க்கை மேம்பாட்டையும் உறுதிப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை உருவாக்கி வழிகாட்டிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள், மேயருக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, "முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்காக மறுவாழ்வு வீடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கான திட்டங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். அந்த திட்டங்களின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில், இருக்கக்கூடிய முகாம்களில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைக்கப்பட்டு பல நிறுவனங்கள் உதவியோடு இலங்கைத் தமிழர்களுடைய பாரம்பரிய ஓலைபுட்டு கடை உணவகம் திறக்கப்பட்டது" என்றார்.
தமிழை திமுக அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்பி கூறுகையில், "யார் தமிழை வளர்கிறார்கள்? யார் தமிழை அழிக்க நினைக்கிறார்கள்? என மக்களுக்கு தெரியும். மேலும், தொடர்ந்து மாணவர்கள் மருத்துவக் கல்லூரி படிக்க முடியாத ஒரு நிலையை உருவாக்கிய அந்த மனசாட்சியோடு பேச வேண்டும். தமிழர்களுக்கு எதிரான தமிழ் மொழியை அழித்து கொண்டு இந்தியை கொண்டு வருவது யார் என மக்களுக்கு தெரியும்" என்றார்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான கேள்விக்கு அவர் கூறுகையில், "நடந்து இருக்க கூடிய சம்பவம் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, அதற்கு முதலமைச்சர் கண்காணிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமில்லாமல், தீவிரமாக தவறு செய்திருக்கக்கூடிய யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு தவறு நடந்து விட்டது, ஆனால் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழ்நாடு அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது.
இதில் அரசியல் ஆக்க வேண்டும் வேண்டும், மக்களுக்கும் இடையேயான காழ்ப்புணர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவது மிகவும் தவறான ஒன்று" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு