கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மேலும் இந்த ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிப்புகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் 60 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்த அரசுப் பேருந்துகள் தற்போது மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மண்டலங்களுக்கு இடையே 50 விழுக்காடு பணியாளர்களுடன் இன்று (ஜூன் 1) அரசுப் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது. இதில் குறைந்த அளவிலான பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணம் செய்தனர்.
தொடங்கியது பேருந்து சேவை - தொடங்கியது பேருந்து சேவை
தூத்துக்குடி: 60 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்த பேருந்து சேவை 50 விழுக்காடு பயணிகளுடன் இன்று ( ஜூன் 1) தொடங்கப்பட்டது.