தூத்துக்குடி: தூத்துக்குடி வான்தீவு கடல் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்க இலாகா உதவி ஆணையர் நரசிம்மனுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தூத்துக்குடி சுங்க இலாகா கடல் பிரிவு அதிகாரிகள் தங்களது படகுமூலம் வான் தீவு பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது, வான் தீவு பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு படகை பிடித்து சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக 30 சாக்கு பைகளில் பதப்படுத்தப்பட்ட 400 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் 400 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்து படகில் இருந்த ஆறு மீனவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
இதையும் படிங்க:காரில் 100 கிலோ கஞ்சா கடத்தல்: கேரள இளைஞர்கள் கைது