ETV Bharat / state

கடல் அட்டை சேகரிப்பு: மூச்சுத் திணறி உயிரிழந்த மீனவர்

தூத்துக்குடி: நாட்டுப் படகில் கடல் அட்டை சேகரிக்க சென்ற மீனவர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

கடல் அட்டைச் சேகரிக்கும் போது மூச்சுத்திணறி உயிரிழந்த மீனவர்

author img

By

Published : Apr 25, 2020, 4:21 PM IST

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மீராசா என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் கடந்த 23ஆம் தேதி திரேஸ்புரத்திலிருந்து கடல் அட்டை எடுப்பதற்காக சக மீனவர்கள் வேல்முருகன், பென்சிகர், செய்யது, ஆரோக்கியம், முருகன் உள்ளிட்ட ஐந்து பேர் கடலுக்கு சென்றனர். இதில் பென்சிகர் நேற்றிரவு (ஏப்ரல் 24) கடலில் அட்டை சேகரிக்கும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவிலிருந்து மீன் பிடி தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து நாளொன்றுக்கு 50 நாட்டுப் படகுகளே கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 51ஆவது படகாக மீராசாவின் நாட்டுப் படகு கடலுக்கு அத்துமீறி சென்றதாக கூறப்படுகிறது. கடலில் அட்டை சேகரிப்பது குறித்து மீன்வளத் துறையின் அனுமதியின்றி கடலுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் அட்டைச் சேகரிக்கும் போது மூச்சுத்திணறி உயிரிழந்த மீனவர்

இந்நிலையில் இறந்துபோன பென்சிகரின் உடல் உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் ஆய்வு செய்த டிஐஜி லோகநாதன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.