தூத்துக்குடி- திருநெல்வேலி நெடுஞ்சாலையின் பிரதான பகுதியான 3ஆவது மைல் மேம்பாலத்தில், கடந்த 22ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவசர கதியில் தார் சாலை போடப்பட்டது. இச்சாலை ஒரு வார காலத்திற்குள் முற்றிலும் சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் பல லட்சம் செலவு செய்து தரமற்ற சாலை போடப்பட்ட நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தார்சாலை இன்று(அக்.24) போராட்டம் நடத்தினர். அப்போது விரிசல் விழுந்த சாலையில் மலர்வளையம் வைத்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி, இச்சாலையை உடனடியாக சீரமைத்து விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க...'திருமாவளவன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதம்!'