ETV Bharat / state

'மக்களை ஏமாற்றுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: சொன்ன சொல்லிலிருந்து பின் வாங்குவதற்காகவும், மக்களிடையே தவறான தகவல்களை சொல்லி ஏமாற்றுவதற்காகவும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

kadambur-raju
author img

By

Published : Oct 17, 2019, 2:22 PM IST

அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கடம்பூர் ராஜூ

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடிப்படை வசதிகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்திருப்பதனால் தான் தமிழ்நாட்டில் அதிமுகவின் அரசு 31 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்துள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வந்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என ஸ்டாலின் கூறினார். அதற்குப் பதிலடியாக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் மு.க. ஸ்டாலின் சொன்னது போல முதலமைச்சருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தினாரா?

சொன்ன சொல்லிலிருந்து பின் வாங்குவதற்காகவும் மக்களிடையே தவறான தகவல்களை சொல்வதற்காகவும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என முதலமைச்சர் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. இடைத்தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்- கடம்பூர் ராஜூ

நாங்குநேரியில் காங்கிரஸ் களத்திலேயே இல்லை. அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் மக்களை தவிக்க விட்டுவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அங்கு சென்று விட்டார் என்ற கோபம் மக்களிடையே உள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும். அதிமுக அரசுக்குதான் மக்களின் ஆதரவு உண்டு என்பதை இந்தத்தேர்தல் நிரூபிக்கும்" என்றார்.

இதையும் படிங்க: தொடங்கியது வடகிழக்குப் பருவமழை - சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Intro:மக்களிடையை தவறான தகவல்களை சொல்வதற்காக ஸ்டாலினுக்கு நோபல் தரலாம் என முதலமைச்சர் சொன்னது பொருத்தமாக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Body:மக்களிடையை தவறான தகவல்களை சொல்வதற்காக ஸ்டாலினுக்கு நோபல் தரலாம் என முதலமைச்சர் சொன்னது பொருத்தமாக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி

அதிமுக கட்சியின் 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு தமிழக அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,
அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு, அதிமுகவின் 49 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்குள் தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அடிப்படை வசதிகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்திருப்பதனால் தான் தமிழகத்தில் அதிமுகவின் அரசு 31 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்துள்ளது. இதன் பிரதிபலிப்பாக இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். அதன் பிறகு ஸ்டாலின் என்னகருத்து கூறுகிறார் என்பதை பார்ப்போம்.
சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை. அவர் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவர் மக்களால் புறக்கணிக்கப்படுவார். மக்கள் புறக்கணிக்கப்படுவதுதான் அவருக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வந்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த நான் தயார் என ஸ்டாலின் கூறினார். அதற்குப் பதிலடியாக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் மு.க. ஸ்டாலின் சொன்னது போல முதலமைச்சருக்கு பாராட்டு கூட்டம் நடத்தினாரா?. சொன்ன சொல்லிலிருந்து பின் வாங்குவதற்காக, மக்களிடையே தவறான தகவல்களை சொல்வதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என முதல்-அமைச்சர் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கிறது.
ஜனநாயக நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். திமுகவுக்கு மூன்றெழுத்து போன்று ஊழலுக்கும் மூன்றெழுத்து.
எனவே அவர்கள் ஊழலை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
இடைத்தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மக்கள் எழுச்சி அதிகமாக உள்ளது. நாங்குநேரியில் காங்கிரஸ் களத்திலேயே இல்லை.
அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களை தவிக்க விட்டுவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அங்கு சென்று விட்டார் என்ற கோபம் மக்களிடையே உள்ளது. எனவே
இந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும்.
நிச்சயமாக இந்த தேர்தல் வாக்காளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதிமுக அரசுக்கு தான் மக்களின் ஆதரவு என்பதை இத்தேர்தல் நிரூபிக்கும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.