ETV Bharat / state

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை.. தென்காசி, நெல்லை மாவட்டங்களின் நிலை என்ன?

Thoothukudi school leave: தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, தூத்துக்குடியில் பள்ளி கல்லூரிகளுக்கும், தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.21) ஒரு நாள் விடுமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்லுரிகள் வழக்கபோல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

School colleges leave announcement in southern districts of TN
தூத்துக்குடியில் பள்ளி கல்லூரிகளுக்குத் தொடரும் விடுமுறை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 6:26 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தென் மாவட்டங்கள் அதன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. ஆனால் தற்போது வரை சில பகுதிகளில் தண்ணீர் வடியாததால் அப்பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைப்பாதிப்புகளை அதிகளவில் சந்தித்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடரும் விடுமுறை: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன‌மழை பெய்ததால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளின் நலன் கருதி பள்ளிகள் கல்லூரிகளுக்கான விடுமுறை நாளை(டிச.21) ஒருநாள் மட்டும் தொடரும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் தொடரும் விடுமுறை: இதைத்தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கனமழையை சந்தித்து தற்போது வெள்ள நீர் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும்: திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் முழுமையாக வடிந்திருந்தாலும், இன்னும் சிலப்பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால், பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறை நாளை(டிச.21) ஒருநாள் மட்டும் தொடரும் என்றும், கல்லூரிகள் நாளை(டிச.21) முதல் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மழை வெள்ளப்பாதிப்பின் போது, நிவாரண முகாம்களாக செயல்பட்டு வந்த கல்லூரிகள் மட்டும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்று வெள்ளத்தின் கழுகுப் பார்வை காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.