தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு தாலுகாவில் சத்திரப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் செம்பு குட்டி என்பவர் தனது தோட்டத்தில் சொட்டுநீர்பாசனத்திற்கு குழாய் பதிப்பதற்காக விவசாய நிலத்தை தோண்டியுள்ளார்.
அப்போது பழங்கால பொருள்கள் பூமிக்கடியில் புதைந்துள்ளதை பார்த்து தாலுகா அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சென்று பார்த்தனர். அப்போது பழங்கால பொருள்கள் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவைகளை தாலுகா அலுவலகம் கொண்டுவந்து தலைமையிடத்து துணை வட்டாச்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் பூஜை பொருள்கள், தகடுகள், விளக்குகள், சிறிய சிலைகள் போன்ற 39 பொருள்கள் இருந்தன.
இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சை கிளப்பிய இயக்குநர் லீனா - இப்போ யார் கையில் சிகரெட்?