தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி மேற்கு தெருவைச் சேர்ந்த ஜெயசிங். இவருடைய மனைவி சூரியகலா. இவருக்கு புதுக்கோட்டையில் 8.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கூட்டாம்புளி மெயின் ரோடைச் சேர்ந்த பொன் செல்வராஜ், அவரது மனைவி சுகந்தி, மகன் ரூபன்பால்ராஜ் (32) மற்றும் குலையன்கரிசலைச் சேர்ந்த சுரேந்திரன் ஆகியோர் கூட்டுசதி செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சூரியகலாவின் மகன் குமார் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தடய அறிவியல் ஆய்வகம் மூலம் மேற்படி உயில் பத்திரம் போலியானது என உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான காவல்துறையினர் கூட்டாம்புளியில் பதுங்கியிருந்த ரூபன் பால்ராஜை கைது செய்தனர்.