தூத்துக்குடி பாரதிநகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் நடேஷ். இவர், கல்லாமொழி அனல் மின்நிலையத்தில் மணல் ஆராய்ச்சி பிரிவில் பொறியாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மகாராணி (29). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பகல் 12 மணியளவில் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய மகாராணி அவருடைய தந்தை உலகுமுத்துவிடம் காய்கறி வாங்கிவருமாறு செல்போனில் தகவல் கூறியுள்ளார்.
அப்போது, காய்கறி வாங்கிகொண்டு உலகுமுத்து வீட்டுக்கு வந்த மகாராணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிப்காட் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மகாராணியின் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மகாராணி இறந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.