கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜசெல்வி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவில்பட்டி பங்காளத் தெருவைச் சேர்ந்த பாண்டிராஜன் என்ற ஜவுளி வியாபாரி ஓட்டி சென்ற ஆம்னி வேனை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
அதில் சுடிதார், லேக்கின்ஸ், கால்மிதியடி, ஷார்ட்ஸ் உள்ளிட்ட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் ஆடைகளை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.