மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இச்சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், டெல்லி போராட்டத்தின் மீது இஸ்லாமியர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் முடியும் நேரத்தில் திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவப்பொம்மையை தீயிட்டுக் கொளுத்தியதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சிறுவர்கள் முழக்கம் - ஆர்ப்பரிப்பில் போராட்டக்காரர்கள்