நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜனகன். இவர் திருவாரூர் கீழ வீதி பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தை இவரது மனைவி கௌரி மற்றும் ஊழியர்கள் நிர்வகித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் பல்வேறு நபர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் செலுத்திவந்தனர். ஏலச்சீட்டு தவணை முடிவடைந்த நிலையிலும் பலருக்கு பணம் திருப்பித் தரப்படவில்லை. இது குறித்து பணம் செலுத்தியவர்கள் ஐனகனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்களுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, தங்கள் பணத்தை திரும்ப பெற்று தர வேண்டி பாதிக்கப்பட்ட நபர்கள் 16 பேர் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் சுமார் 1.5 கோடி ரூபாயினை ஜனகன் மோசடி செய்திருப்பதாகவும், மொத்தமாக 90 கோடி வரை மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றி பணம் பறித்த மோசடி வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம்