ETV Bharat / state

திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி கரோனா வார்டாக மாற்றம்! - திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி

திருவாரூர்: கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி கரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Thiruvarur Government Arts Colleage
author img

By

Published : Jul 6, 2020, 4:36 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலையில், திருவாரூரில் இதுவரை 546 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, இட வசதியைக் கருத்தில் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் ஆனந்த் உத்தரவின் பேரில் திரு.வி.க அரசு கலைக்கல்லூரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தில் நோயாளிகளுக்காக 150 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைக்கும் காவல் துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.