ETV Bharat / state

வாக்களிக்க வந்த கர்ப்பிணி மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல் - PREGNANT LADY

திருவாரூர் : கேக்கரை அருகே ஆட்டோவில் வாக்களிக்க வந்த கர்ப்பிணியை அதிமுகவினர் கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்ப்பிணி உதயசேகரி
author img

By

Published : Apr 18, 2019, 5:34 PM IST

தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்களும் திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் மற்றும் நடிகர்களும் தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் கேக்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகை தொகுதி மக்களைவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு அதே பகுதியைச் சேர்ந்த குணசேகர் கர்ப்பிணி உதயசேகரி என்பவரை வாக்களிப்பதற்காக தனது ஆட்டோவில் அழைத்து வந்தார். அப்போது, அங்கு வந்த அதிமுகவினர் திடீரென கர்ப்பிணி உதயசேகரி வந்த ஆட்டோவை மறித்து, எப்படி பரிசுப்பெட்டி சின்னம் ஒட்டிய ஆட்டோவில் வாக்களிக்க அழைத்து வரலாம் என ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து அதிமுகவினர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து, ஆட்டோவில் இருந்த கர்ப்பிணி உதயசேகரியை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

நிறமாத கர்ப்பிணி மீது தாக்குதல்

இதனையடுத்து, ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த கர்ப்பிணி உதயசேகரி திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து திருவாரூர் நகர காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். வாக்களிக்க வந்த கர்ப்பிணி உதயசேகரி மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:

Body:நாகை நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திமுக தலைவரும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது, மேலும் நாகை நாடாளுமன்றமானது திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் ஆகிய மூன்று தொகுதிகளையும் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட நாகை, கீழ்வேளூர் வேதாரண்யம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது.

நாகை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஆண் வாக்காளர்கள் 642863, பெண் வாக்காளர்கள் 660157 இதர வாக்காளர்கள் 40 என மொத்தம் 1303060 வாக்காளர்கள் உள்ளனர்.

நாகை நாடாளுய் தொகுதியை பொறுத்தவரை 1537வாக்கு சாவடிகள் உள்ளன.இதில் திருவாரூர் மாவட்டத்தில் 82வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு மத்திய அரசு பாதுகாப்பு படையினரால் முழுநேர கண்காணிப்பில் உள்ளது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்களும் திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களும் தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு காரணமாக இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவானது தாமதப்படுத்துவது மீண்டும் இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் கேக்கரை சாலையில் தனியார் பள்ளியில் நாகை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது.

அதே பகுதியை சேர்ந்த குணசேகர் என்பவர் தனது ஆட்டோவில் உதயசேகரி என்ற கர்ப்பிணி பெண்ணை வாக்களிப்பதற்காக அழைத்து வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அதிமுகவினர் திடீரென ஆட்டோவை மறித்து எப்படி பரிசுபெட்டி சின்னம் ஒட்டிய ஆட்டோவில் வாக்களிக்க அழைத்து வரலாம் என ஓட்டுனர் குணசேகரன் உடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து அதிமுகவினர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து, ஆட்டோவில் இருந்த உதயசேகரி என்ற கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்டு அடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உதயசேகரி திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து திருவாரூர் நகரகாவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.