திருவாரூர்: வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1430 - பசலி ஆண்டு (நில வருவாய் ஆண்டு) வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு, கணக்குகளை சரிபார்த்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், 'வலங்கைமான் வட்டத்தில் நடைபெற்றுவரும் 1430-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நேற்று (ஜூன்.22) தொடங்கி, வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தீர்வாயத்தில் கணக்குகள் சரியாக நிர்வகிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கணக்குகள் சரியாக நிர்வகிக்கப்படாமல் இருந்தால், அக்கணக்குகளை சரியாக நிர்வகித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இத்தீர்வாயத்தில் வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றுதல், பட்டா உட்பிரிவு உள்ளிட்டப் பல கோரிக்கை மனுக்கள் அளித்தவர்களுக்கு, மனுக்களைப் பெற்று பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டு உடனடியாக ஆணை வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.
இதையும் படிங்க:மதுரையை மிரளச் செய்த திருட்டு கும்பல் கைது; 13 பைக்குகள் பறிமுதல்!