திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முன்பு தொழிலாளர் சங்கத்தினரும், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினரும் இணைந்து 50-க்கும் மேற்பட்டோர் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்திட வேண்டும். அக்டோபர் முதல் ஜனவரிவரை 22 சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய நிரந்தர ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் சேமிப்புக் கிடங்குகளை திறந்திட வேண்டும். மேலும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூபாய் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம்வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
தமிழ்நாட்டில் 80 வயதிற்கும் மேற்பட்ட முதிய வாக்காளர்கள் இத்தனை லட்சமா...!