கரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரப்புபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் பிறந்தநாள், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான மாத்திரைகள் வீடுகளுக்கே சென்று நேரடியாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாத்திரைகள் கிடைக்கப் பெறாதவர்கள் 9499933843, 9499933844 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்துத் தெரிவித்தால் உடனடியாக மாத்திரைகள் வீடுகளுக்கே நேரடியாக வந்து வழங்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்த கரோனா பாதித்த பெண்