திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள சுந்தரலிங்கம் என்பவர் சாலைப் பணிக்காக வந்த திருவாதிரைமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் என்பவரிடம் பத்தாயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் லஞ்ச ஒழிப்பு துறையினருக்குப் புகார் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை செந்திலிடம் கொடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரலிங்கத்திடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர்.
இதனையடுத்து செந்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரலிங்கத்திடம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்தபோது வெளியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான காவலர்கள் சுந்தரலிங்கத்தைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த கைது சம்பவம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முழுவதும் அலுவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கைது - திருவாரூர் செய்திகள்
திருவாரூர்: லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைதுசெய்தனர்.