திருவாரூர் அருகே உள்ள வடக்குவெளி கிராமத்தின் வழியாகச் செல்லக்கூடிய ஓடம்போக்கியாற்றில் புரெவி புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள மணல்மேடு கிராமத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மணல்மேடு கிராமம் முழுவதும் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் ஆடு, மாடுகள் முதல் வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
மணல்மேடு கிராமத்திற்குள் புகுந்த ஆற்றுநீர்: பொதுமக்கள் அவதி மேலும் கடந்த இரண்டு நாள்களாக குடிநீர், மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவிற்கு வழியில்லாமலும் குழந்தைகளுக்குப் பால் இல்லாமலும் தவித்துவருகின்றனர்.இதனையடுத்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றும் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை எனவும் ஆற்று நீர் உள்ளே வரும் இடத்தில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் அடைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது வரை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.மேலும் மாவட்ட ஆட்சியர் சாந்தா காரில் அமர்ந்துகொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடாமல் நேராகச் சென்றுவிட்டதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனால் மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில்கொண்டு உடனடியாக குடிநீர், உணவு விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் 10 பேர் கைது: 52 பவுன் தங்கநகை, 21 கிலோ பட்டுநூல் பறிமுதல்!