ETV Bharat / state

விடுதியிலிருந்து வெளியேற மறுத்த மாணவர்கள்; விடிய விடிய போராட்டம்! - protest at thiruvarur central college for delhi police attack on students

திருவாரூர்: மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விடுதியைவிட்டு வெளியேற்றும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest at thiruvarur central college
மத்திய பல்கலைகழகம்
author img

By

Published : Dec 17, 2019, 5:43 AM IST

திருவாரூரை அடுத்த நீலக்குடியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து இன்று மாலை திடீரென்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் உருவ பொம்மையை மாணவர்கள் எரித்துள்ளனர்.

இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு தொடர் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் அறிவித்தது மட்டுமல்லாமல் விடுதியில் தங்கிருக்கும் மாணவர்களையும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

விடுதியிலிருந்து வெளியேற மறுத்து மாணவ மாணவியர் நள்ளிரவில் போராட்டம்

இந்த உத்தரவினால் வெளி மாநில மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவ மாணவியர் நள்ளிரவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தொழிலதிபர் ராமோஜி ராவ் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியீடு!

Intro:Body:
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பல்கலைக்கழகம் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உடனடியாக மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரை அடுத்த நீலக்குடியில் மத்திய பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசாரின் தாக்குதலை கண்டித்து இன்று மாலை திடீரென பல்கலைக்கழகவளாகத்தின் முன்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உருவ பொம்மையை எரித்தனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதனால் வெளி மாநில மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக கல்லூரி விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இரவிலும் திடீர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.